சிதனா கவிதைகள்


காதலற்ற கைகள்


தோழி
இன்னமுமா வருகிறது
அந்த கனவு?
உன் கணவனை
கட்டிப்பிடித்து
வழியனுப்பும்
புகைப்படம் ஒன்று
முக நூலில் பதிவிட்டிருந்தாயே
அவன் முதுகும்
உன் முகமும்
பளிச்சிட்டதே
அந்தப் புகைப்படம்தான்
உடன்
பொய் பேசிய
உன் கண்களுடன்………….
அதுவேதான்!

அடி தோழி!
ஒரு உண்மை சொல்லவா?
இறுக்கியணைப்பதன்
வழி
மனசுக்குள்
கடத்த முடியாது
காதலை!

விரல்களின் சூட்சமம் அறியாதவள்
காதலித்தது எப்படி
உன்னவனையே
தழுவுதல் தவிர்த்த
உன்
கைவிரல்களை
ஒன்று கேட்க வேண்டுமே

இன்னமுமா
வருகின்றது
அந்த பொல்லாத கனவு,
அவன்
இன்னொருத்தியுடன்
சல்லாபித்திருந்த
அந்த
பொல்லாக் கனவு!


சிதனா


No comments:

Post a Comment